எழுத்துரு விளம்பரம் - Text Pub |
58. இந்த எண் மிகுந்த பிரசித்தியையும், வசீகரத்தையும் தரும். காரிய அனுகூலம் ஏற்படும். வாழ்க்கை வேகமாக முன்னேறும். ஆசாரசீலராகவும், மதாபிமானமுள்ளவராகவும் ஆவர். சீர்திருத்த நோக்கங்கள் மிகும். பிறந்த தேதி எண்கள் 4 அல்லது 8 ஆக இருந்தால் புகழுடன் பொறுப்பு வாய்ந்த பெரிய பதவிகளை வகிப்பர். விரும்பத்தகாத காரியங்களைச் செய்ய நேரும். மனத்தில் ஏதாவது பயம் இருக்கும். வாழ்க்கை அதிர்ஷ்டமானதாகவே தோன்றும். வேறு எண்களில் பிறந்தவர்கள் இந்த எண்ணைக் குறிக்கும் பெயரை வைத்துக்கொண்டால் மேல் நோக்கிச் சென்ற வாழ்க்கை படிப்படியாக இறங்கிவிடும். புகழ் குறைந்துபோகும். சுயநலம் மிகுந்த வாழ்க்கை வாழ்வர். பலவிதக் கஷ்டங்களையும் அனுபவிக்க நேரும்.