எழுத்துரு விளம்பரம் - Text Pub |
22. இந்தத் தேதியில் பிறந்தவர்களுக்குக் கூறப்பட்டிருக்கும் பலன்கள் இந்த எண்ணுடைய பெயருக்கும் பொருந்தும். இது உணர்ச்சிகளை அதிகமாகத் தூண்டிவிடும். போட்டி, பந்தயம், குடி, போகம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிலோ அல்லது எல்லாவற்றிலுமோ மனம் தீவிர நாட்டம் பொருளையெல்லாம் இழக்கும் சந்தர்ப்பத்தை நோக்கி விரைவர். கெட்ட ஆலோசகர்களால் சூழப்பட்டும் காணப்படுவர். ஆனால், இவர்கள் பிறருடைய சொற்படி நடப்பவரல்லர். பிறந்த தேதி எண்கள் நன்றாக இருந்தால் வெற்றி கிடைக்கும். இல்லையென்றாலும் முழுத் தோல்வி அடையாமல் சமாளித்துக்கொள்வர். சுயநலக்காரர்கள் இவர்களை எப்போதும் தூண்டிக்கொண்டிருப்பர். சிறந்த நிர்வாகிகள். எந்தக் கஷ்டம் வந்தாலும் கலங்காமல் சமாளித்துக்கொள்வர். கெட்ட பெயர் ஏற்படுவது சகஜம்.