எழுத்துரு விளம்பரம் - Text Pub |
17. இந்த எண்ணைப் பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் பலவிதமான கஷ்டங்களுக்கும் சோதனைகளுக்கும் உள்ளாவர். ஆனாலும், சளைக்காமல் மீண்டும், மீண்டும் போராடுவர். இவர்கள் மட்டுமே தோல்வியை அலட்சியம் செய்து மீண்டும் போரிட வல்லவர்கள். இறுதியில் அனைத்து எதிர்ப்புகளையும் வென்று மிகுந்த சக்திமானாக வாழ்வர். இந்த எண் சித்திகளைத் தரவல்லது. ஏராளமான ஐஸ்வர்யத்தையும், காலத்தால் மங்காத புகழையும் கொடுக்கும். உலகப் பிரசித்தமான காரியங்களைச் செய்வர். உயிரையும், உடலையும் பொருட்படுத்தாமல் உழைத்து தங்களுடைய லட்சியத்தில் வெற்றி அடைவர். உலகம் இவர்களை மறக்க முடியாது.