எழுத்துரு விளம்பரம் - Text Pub |
15. இந்த எண் காரிய வெற்றியையும், எப்போதும் லாபமடைவதையும், எந்த வழியிலாவது தங்களுடைய காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் திறமையையும் குறிக்கிறது. காமம், குரோதம், வஞ்சகம் ஆகியவை இவர்களைக் கீழான மனிதர்களாக்க நேரும். சுயநலம் நாளுக்கு நாள் விருத்தியாகும். முகவசீகரமும், வாக்குச் சாதுர்யமும் எக்காரியத்தையும் சாதித்துக்கொள்ள உதவும். இவர்களுக்கு உதவ பலர் எப்போதும் தயாராக இருப்பர். யோகம் மிகுந்த வாழ்க்கை அமையும். பிறந்த தேதி எண் அதிர்ஷ்டமானதாக அமைந்து விட்டால் இந்தப் பெயர் கூட்டு எண்ணை யுடையவர்கள் புகழையும் போக போக்கியங்களையும் அனுபவிப்பர்.