24 September, 2020, Thu 16:39 | views: 7087
தமிழ் அரசியல் சூழலைப் பொறுத்தவரையில் இப்போது அதிகம் பேசப்படும் ஒரு அரசியல் தலைவராக விக்கினேஸ்வரன் தெரிகின்றார். வழமையாக ஊடகங்கள் மத்தியில் அடிக்கடி பேசப்பட்ட சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் சற்று பின்னுக்கு சென்றுவிட்டனர். நாடாளுமன்றத் தேர்தலின் போது ஏற்பட்ட சர்ச்சைகளை தொடர்ந்து சுமந்திரன் அதிகமாகப் பேசுவதை நிறுத்திக் கொண்டார். ஒரு வேளை தான் அதிகம் பேசியதால்தான் தேவையில்லாத சர்ச்சைகளுக்குள் அகப்படவேண்டியேற்பட்டது என்பதை அவர் உணர்ந்திருக்கலாம் – அல்லது, இப்போது பேசுவதற்கு எதுமில்லையென்றும் சுமந்திரன் கருதியிருக்கலாம். ஏனெனில் சுமந்திரனின் அரசியல் அணுகுமுறைகள் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. சுமந்திரனின் தோல்வியென்பது அடிப்படையில் சம்பந்தனின் தோல்வி. எனவே இந்த தோல்வியிலிருந்து எழுவதற்கு, ஏனையவர்கள் தோல்வியடையும் வரையில் காத்திருக்க வேண்டியிருக்கின்றது. அதாவது, கூட்டமைப்பை தவறென்று கூறி வெற்றிபெற்றிருக்கும் விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களும் கூட்டமைப்பின் இடத்திற்கு வரும்வரையில் அமைதி காப்பது நல்லதென்றும் சுமந்திரன் எண்ணியிருக்கலாம். சுமந்திரன் ஒரு வேளை அவ்வாறு கருதியிருந்தால் அவரது நம்பிக்கை நிச்சயம் வீண் போகப் போவதில்லை. ஏனெனில் இலங்கையின் இன்றைய அரசியல் சூழலைப் பொறுத்தவரையில் அரசாங்கத்தின் வியூகங்களை எதிர்கொள்வதற்கான தமிழ் ஆற்றல் மிகவும் பலவீனமாகவே இருக்கின்றது. எண்ணிக்கையில் சிறுபாண்மையினரின் உதவியை எதிர்பார்க்காத ஒரு அரசாங்கம் இருப்பதால், நாடாளுமன்றத்தில் என்னதான் பேசினாலும் அது பெரியளவில் தாக்கங்களை ஏற்படுத்தப் போவதில்லை. இந்த இடத்தில்தான் – விக்கினேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்? அவரது அரசியல் பாதையெது? என்னும் கேள்விகள் எழுகின்றன.
![]() | அடுத்த ![]() |
![]() | |
![]() | |
![]() | |
• உங்கள் கருத்துப் பகுதி |
| ||||
* உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி | ||||
|
டொலர் நெருக்கடியை தீர்க்க ரணில் அமைக்கும் வியூகம் வெற்றிபெறுமா?![]() 16 May, 2022, Mon 19:44 | views: 1255
தமிழ்க் கட்சிகளின் கவனத்திற்கு![]() 27 April, 2022, Wed 17:35 | views: 8011
|
Advertisement | |
![]() | |
![]() | |
![]() | |
![]() | |
![]() | |
PUB | |||
|